பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அதற்கு வழி வகை செய்கிறது
*இந்த சட்டம் ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்* (சர்வ சிக்ஷா அபியான் SSA )
*இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்*?
★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,
★ தாழ்த்தப்பட்டவர்கள்,
★ மலை ஜாதியினர்,
★ பிற்படுத்தப் பட்டவர்கள்,
★ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,
★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.
★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,
★மாற்றுத்திறனாளிகள்
★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்
★ மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்)
★ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.
நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்
இருக்கும் தனியார் பள்ளிகளில் உங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009) R T E. ன் கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்
இருக்கும் தனியார் பள்ளிகளில் உங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009) R T E. ன் கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்
RTE Online Applications Form – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
மாணவர்களின் பெற்றோர்களும், பள்ளிகளும் http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஏப்ரல் 22-ம் தேதியான இன்று முதல் மே 18 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#FreeCompulsoryEducation #PrivateSchool #CompulsoryEducationForm #rtetnschool
No comments:
Post a Comment